குரு வாழ்க
தொண்டு செய்
|
உ
ஸ்ரீ பூரண புஷ்கலை சமேத பரதேசியப்பர் துணை
|
திரு வாழ்க
இறையோடு கூடு
|
வணக்கம்
அன்புடையீர்!
அடியேன் தாஸன் P.இராதாகிருஷ்ணன் அடியேனது வாழ்வியல் நடைமுறைகளை குருதிருமுருக அகத்திய மகாகுருதேவரின்
வழிமுறைகளின் படி சித்தி மார்கத்திற்காக இயக்க மேற்படி அடியேனது நடைமுறைகள் தவமும்
தொண்டுமாய் ஆனது.
தொண்டு செய், இறையோடு கூடு என்ற உயரிய
நோக்கத்தை அடிப்படையாய் கொண்டு உருப்பெற்றது. இவ்வாறன அடியேனது வாழ்வில் சிறுசிறு தொண்டுகளை
நண்பர்களோடு சேர்ந்து ஆற்றிவந்த அடியேனது குழுவை முறைபடுத்த வேண்டி ஸ்ரீ
அரியமுத்து நாச்சியார் சமூகத்தொண்டு நிறுவனம் என்ற முகாந்திரத்தில் அரசு முறைப்படி
வகைபடுத்தி அடியேனது குழுவினர் முடிந்தவரை தொண்டுகளை செய்து வருகிறோம்.
சிறந்த தொண்டு
முறைகளில் இணைய விரும்புவோர் மனித ஆற்றலாகவோ, பொருளாகவோ, நிதி உதவிகளையோ செய்திட
சேவையாற்றிட வாரீர்.
---
