சேவைகள்


குரு வாழ்க
தொண்டு செய்
உ
ஸ்ரீ பூரண புஷ்கலை சமேத பரதேசியப்பர் துணை


திரு வாழ்க
இறையோடு கூடு
ஸ்ரீ அரியமுத்து நாச்சியார் சமூகத்தொண்டு நிறுவனம்



வணக்கம் அன்புடையீர்!
            அடியேன் தாஸன் P.இராதாகிருஷ்ணன் அடியேனது வாழ்வியல் நடைமுறைகளை குருதிருமுருக அகத்திய மகாகுருதேவரின் வழிமுறைகளின் படி சித்தி மார்கத்திற்காக இயக்க மேற்படி அடியேனது நடைமுறைகள் தவமும் தொண்டுமாய் ஆனது.
            தொண்டு செய், இறையோடு கூடு என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாய் கொண்டு உருப்பெற்றது. இவ்வாறன அடியேனது வாழ்வில் சிறுசிறு தொண்டுகளை நண்பர்களோடு சேர்ந்து ஆற்றிவந்த அடியேனது குழுவை முறைபடுத்த வேண்டி ஸ்ரீ அரியமுத்து நாச்சியார் சமூகத்தொண்டு நிறுவனம் என்ற முகாந்திரத்தில் அரசு முறைப்படி வகைபடுத்தி அடியேனது குழுவினர் முடிந்தவரை தொண்டுகளை செய்து வருகிறோம்.

எமது எதிர்கால சேவை திட்டங்கள்:
       1.     இறைப்பணியில் அர்ப்பணிப்பு:
பூட்டி கிடக்கும் புராதண ஆலயங்களை பூஜைக்காக வகைப்படுத்துதல், ஆலயங்களில் அன்னதானம் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்றவை.

      2.     கோசாலைகள் மற்றும் உயிரினப் பராமரிப்பு சேவை:
இந்திய திருநாட்டின் முக்கிய உயிரினமான பசுக்கள் மற்றும் காளைகளை பராமரித்தல், கன்றுகளுக்கு தேவையான அளவு பால் கிடைக்கச் செய்தல். இவைகளில் கன்று ஈன்று மறுத்த வயதான பசுக்கள் மற்றும் காளைகளை இறைச்சிக்கு போகாமல் காத்தல். சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்கள் மற்றும் உயிரினங்களை பராமரித்தல்.  இனப்பெருக்க காலங்களில் தெருநாய்களின் குட்டிகளை சாலைகளில் இருந்து மீட்டு காத்து விடுதல். குறிப்பிட்ட இடங்களில் பறவையினங்கள் பயமின்றி வாழ ஏற்பாடுகள் செய்தல். இன்னும் பல...

      3.     கல்வி சேவைகள் (கிராமப்புற பள்ளிகள் தத்தெடுப்பு):
கல்விக்கான நடைமுறைகளில் அரசுடன் இணைந்து கிராமப்புற பள்ளிகளைத் தத்தெடுத்தல். மலை கிராமங்கள், உள்ளார்ந்த கிராம பள்ளிகளில் குழந்தைகளின் கல்விக்காக உதவுதல், கல்வி பயிலாதவர்கள், படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலைக்காக பாடுபடுதல்.

      4.     முதியோர் காப்பகம் மற்றும் உதவித் திட்டங்கள்:
ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்கும் வகையில் காப்பகங்கள் அமைத்தல். அவ்ர்கள் வாழ்நாளை பசுமையாக்குதல் இறைத் தொடர்பு உருவாக்குதல், பிச்சைக்காரர்களை காப்பகங்களில் சேர்க்க முயற்சி செய்தல்.

      5.     கைப்பெண் மறுவாழ்வு:
முறையான வாழ்க்கைக்கு ஆலோசனைகளை வழங்குதல், வாழ்வாதாரம் தொடர்பான தொழில் உருவாக்கித்தருதல்.

      6.     கர்ப்பிணிகளுக்கான பேறுகாலச் சேவைகள்:
இன்னும் பல கிராமங்களில் விஞ்ஞான வளர்ச்சிகளை முறைகேடாக பயன்படுத்திக்கொண்டு பேறுகால விஷயங்களில் தடுமாறுதல், நமது இறையாண்மைக்கு மாறுபடுதல் போன்ற விஷயங்களில் இயன்ற அளவு குழு அமைத்து முறைபடுத்துதல், மகப்பேறு மருத்துவமனைகள் அமைத்தல், கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் மற்றும் சுக பிரசவ நடைமுறைகளுக்கு உதவுதல்.

      7.     தனித்திறன் ஊக்குவிப்பு (தொழில் முனைவோருக்கானதும் மற்றும் இளைஞர்களுக்குமான தொழில் முறைமை):
தனித்திறன் பல வகைகளில் மனிதர்களில் உருவாகி அதற்கான வாய்ப்புகளின்மையால் பாழ்பட்டு மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதை தடுக்க தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆற்றலை உலகுக்காக்குதல்.

      8.     பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம்:
பொது மருத்துவ முறைகளில் நமது இந்திய திருநாட்டின் அற்புதமான மூலிகை வகை அவுடதங்கள் எந்த நோயையும் நீக்கவல்லவைகள் ஏராளம் உள்ளன. அவைகளில் அடியேனது அவுடத தயாரிப்புகள் மூலம் (அடியேன் பாரம்பரிய மூலிகை வைத்திய முறைகளை அனுசரித்து வாழ்பவன்) தனி இல்லங்கள் அமைத்து நோய் தாக்குதலில் இருந்து சமூகத்தை காத்தல்.
      பொது வாழ்வு மற்றும் விழாக்காலம் இயற்கை சீதோஷ்ண காலங்களில் சுகாதார முறைகளுக்கு உதவுதல்.

      9.     சமூகக் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பு - நீர் ஆதாரம்:
சமூகக் காடுகள் முறைகளில் மழை பெற வேண்டிய குறிப்பிட்ட இடங்களில் காடுகளை அமைத்து மழை பெறும் வாய்ப்பை ஏற்படுத்துதல். நகர அமைப்பு சூழல்களுக்கு ஏற்ப மரங்களை வளர்க்க முயலுதல். ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தடுப்பணைகளை உருவாக்கி நீர் ஆதாரத்தை நிலைக்கச் செய்தல்.
விவசாய நிலங்கள் பாழ்படுவதை தடுக்கவும், வேலையின்மையை தடுக்கவும், கரம்பு நிலங்களில் நீர் ஆதாரம் வுருவாக்கிக் கொடுத்தல்.

      10.     சாலைகள் குளங்கள் பராமரித்தல்:
சாலை வசதி இல்லாத இடங்களில் சாலைகள், கிராமப்புற இணைப்பு சாலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் போக்குவரத்து வசதிக்கு பாலங்கள் உருவாக்குதல். குளங்களை காத்தல் மற்றும் பராமரித்தல் மூலம் இளைஞர்களுக்காக தொழில் முறைக்கு உதவுதல். சாலைகளில் வழிகாட்டும் பலகைகளை அமைத்தல்.

      11.     கிராமத் தத்தெடுப்பு முறைகள்:
கிராமங்களை நாட்டின் முதுகெலும்பாக நினைத்து கிராமப்புறங்களை தத்தெடுத்து கிராமப்புற தொழில், கலை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, மருத்துவம், தனித்தன்மை, சுகாதாரம், நீர்த்தேவை போன்ற அனைத்து வழிகளிலும் தன்னிறைவை ஏற்படுத்துதல்.

      12.     பேரிடர் கால, பொதுநல  சேவையில் அரசுடன் இணைந்த பங்களிப்பு:
மழை, வெள்ளம், புயல், சுனாமி, வறட்சி, நிலநடுக்கம் இன்னும் பல இயற்கை சீற்றக் காலங்களில் அரசுடன் இணைந்து தொண்டு செய்தல்.

      13.     ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்:
அரசு உதவியை முழுமையாக பெற முடியாத ஏழைகளுக்கு திருமண உதவிகளை செய்து கொடுத்தல்.

     14.     பண்டைய தமிழ் கலைகள், உடற்பயிற்சி மற்றும் தியான முறைமை:
அற்புதங்கள் நிறைந்த நமது பண்டைய தமிழ் கலைகளை காத்து வளர்த்திடல், அதற்கான முகாம்களை உருவாக்குதல், உடற்பயிற்சி முறைகளை ஊக்குவித்தல், நமது தவநெறி மற்றும் தனித்தன்மை தியான முறைகளில் நம்மை நெறிப்படுத்திக்கொள்ளுதல்.
இதுபோன்ற பல சேவைகளை தனியார் அமைப்புகள் செய்திடவே அரசின் தொண்டு நிறுவன முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல அமைப்புகள் நாட்டிற்கு முறையே சேவைகளை வழங்கி வருகின்றன. நாடு நலம் பெற வளர்ச்சியடைய சட்டமும் நிர்வாகமும் அரசு நட்த்த,  தொண்டாற்ற சேவையுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் குவிந்திட நாடு உயர வேண்டும்.
சிறந்த தொண்டு முறைகளில் இணைய விரும்புவோர் மனித ஆற்றலாகவோ, பொருளாகவோ, நிதி உதவிகளையோ செய்திட சேவையாற்றிட வாரீர்.
---